1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Aarumugam Kantharajah
Age 85March 1, 1925 – December 23, 2010
- Born in
- Kantharmadam
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்-கந்தர்மடத்தை பிறப்பிடமாகவும், கனடா-மார்க்கத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் கந்தராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி
ஆண்டொன்று போனாலும்
ஆறுமோ எம்துயரம்.
அழியுமோ உங்கள் ஆத்மா
எங்கள் இதயத்திலிருந்து..!
அரசதுறை பொது நலச்சேவையிலும்
புகழோடு பணியாற்றி..
பக்தியிலும் சத்திய சாயிபாபா
பக்தனாயிருந்து..
பாபாவின் மலர்வு தினத்திலே
உத்தமராய் உதிர்ந்தவரே..
நண்பர்கள் குடும்ப உறவினர்கள்
அனைவரது நெஞ்சினில் நீங்காத
நினைவழியா சின்னமாய்;
நிலைத்திருப்பவரே..!!
அன்புக்கும் அறிவுக்கும்
ஆசானாயிருந்த குடுபத்தலைவனே..
பாசமிகு பப்பாவே அம்மப்பாவே!
அப்பப்பாவே! மாமாவே..
மண்ணுலக மனிதவாழ்வுதனை
காலனே கணிக்கின்றான்
ஆறாத உங்கள் பிரிவுதனை
அன்றாடம் பேசுகின்றோமையா…
ஆண்டவனின் பாதங்களில்
அர்ச்சனை பூக்களாய் வாழ்வீர்களாக..!!!
அன்பானவரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கும் அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள்.
— மகள்-சுமதி, மருமகன்-துரை
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

