மரண அறிவித்தல்

In loving memory of
Ananthaparnam Parameswary
September 22, 2016
- Born in
- vathiri
- Lived in
- Colombo Mattakuliya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடமராட்சி வதிரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மட்டக்குளியை வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தாபரணம் பரமேஸ்வரி அவர்கள் 22-09-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பறுபதம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஆனந்தாபரணம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஆனந்தீஸ்வரி, ஆனந்தரதி, ஆனந்தஜெயஸ்ரீ, ஆனந்தரூபன், ஆனந்தலக்ஸ்மன், ஆனந்தஜோதிலக்ஷ்மி, ஆனந்தஸ்ரீவாணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கந்தசாமி, காலஞ்சென்ற இரத்தினசிங்கம், கனகசிங்கம், பாலசிங்கம், சிவபாதசுந்தரம், உதயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரபாகரன், தில்லைநாதன், தமிழ்ச்செல்வன், பிரேம்குமார், சிவசாந்தி, சிவாஜினி, குமுதினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 23-09-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 12:30 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
65/262, Vystwyke Road,
Crow Island Park,
Mattakkuliya,
Colombo 15.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

