நினைவஞ்சலி

In loving memory of
Anithira Ranjan
Age 19July 19, 2001 – August 3, 2020
- Born in
- France
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அனித்திரா இரஞ்சன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு கடந்துவிட்டதுவோ!
ஈராறு மாதங்கள் உருண்டோடியும் - எம்மனமாறாத் துயரத்தோடு - நீமீள வராயோ என்ற ஏக்கத்துடன்விழியோரம் நீர்நிரப்பிஉன் நினைவுகளை மட்டும் சுமந்துவாசல் பார்த்து நிற்கிறோம் எம் மகளே!
நீ எம் கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகியே போனாலும் எம் முன்னே உன் முகம் எந்நாளும்தூண்டாவிளக்காய் ஒளிர்கிறதே!
நீ மண்விட்டு மறைந்து விண்ணோக்கிசென்றாலும் - கண்விட்டுமறையாமல் உன் நினைவுகளையேசுமக்க வைத்திருக்கும் - இக்கொடிய வரத்தை எமக்கேன் தான் தந்தோயோ?
ஓராண்டுகள் ஆனதம்மா - இன்னும்நம்பமுடியவல்லை எம்மால்!இற்றுவிடா இனிய வாழ்வை காட்டிவிட்டுஅந்த காலன் வந்தழைக்க அதில் - நீஅற்றுப்போனதேனம்மா?உன் தாய் தந்தை முகம் மறந்து,நீ அரவணைத்து வளர்த்த- உன்ஆசைத் தம்பியை தவிக்கவிட்டு, அன்போடு உறவாடும் உறவினரை பிரிந்து,
தோழோடு தோழ் நின்ற தோழர்களை துறந்து,ஈசன் கழலடி காண எமையெல்லாம்வாடவிட்டு சென்றனையோ!
விதி செய்த சதியென்று மனம் சற்றேநினைத்தாலும் - உன் நினைவென்றும் எம்மைஉன் நினைப்பிலேயே நிச்சயமாய் உறைந்திருக்கும்!வானுலக வாழ்வில் ஓராண்டுகள் கடந்தாலும்எம் நினைவுலக வாழ்வில் என்றும்அழியாத ஓவியம் நீயே - அனித்திரா!இன்னோர் பிறப்பொன்று உண்டேல் அதில் மீண்டும் உனை காண மனம் கனக்க காத்திருக்கிறோம்!
உன் நீங்கா நினைவுகளுடன்,அப்பா( இரஞ்சன்) அம்மா(விமலா) தம்பி(ஆகாஷ்)
— அருணா இராமச்சந்திரன்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

