மரண அறிவித்தல்

In loving memory of
Anton Uthayakumar Anojan
Age 21November 20, 1996 – June 21, 2018
- Born in
- Mayiliddi
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் உதயகுமார் அனோஜன் அவர்கள் 21-06-2018 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை இராசம்மா தம்பதிகள், காலஞ்சென்ற மாட்டீன் குமாரசாமி, கனகமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
அன்ரன் உதயகுமார் மரியராணி தம்பதிகளின் பாசமிகு புத்திரரும்,
திகாஷன், டினோஜன், சபீனா, வர்ஷா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவானந்தம் மேரிறோசா(கொன்சி- இத்தாலி), புஸ்பானந்தராஜா செவ்வராணி(விஜி- பெல்ஜியம்), ஜெயராசா, பீற்றர், தவராசா(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான அமலதாஸ், ஸ்ரிபன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
மரியகொறற்றி, தங்கா, றெஜீனா(சுவிஸ்), காலஞ்சென்ற அன்ரன் உதயராஜ் வெண்ணிலா, பற்றிக், துரைமணி, காலஞ்சென்ற செல்வம் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இரங்கல் திருப்பலி 24-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இறம்பைக்குளம் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

