31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Ariyapuththirar Senaathiraja
Age 71April 27, 1945 – November 19, 2016
- Born in
- Chankanai
- Lived in
- Chankanai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், சங்கானை மாளியவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியபுத்திரர் சேனாதிராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
தணியாத ஈழத்தாகம்
மாறாத மண்ணின் மோகம்
வெந்தீர்கள் அப்பா தாய் மண்ணில்
வைத்தீர்கள் அப்பா தழலை எம் நெஞ்சில்...
அப்பா எனும் சொல்லின்
அர்த்தம் கண்டோம்
உழைப்பு எனும் சொல்லின்
உண்மை கண்டோம்.
கடவுளிற்கு நிகராய் கண்டோம் அப்பா உங்களை
உங்கள் கருத்துக்கள் எங்கள் நெஞ்சில்...
விதி விதித்திட்ட வழி
தமிழர் நிர்கதியோ
எமக்கு மட்டும் அது விதிவிலக்கோ
தமிழராய் பிறந்ததனால் வந்த வலிகள் தான்
இன்னும் இன்னும் எம் நெஞ்சில்...
உங்கள் காலடிக்கு எங்கள் கண்ணீர் பூக்கள் சமர்ப்பணம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய மன்றாடுகின்றோம்.
எமது தந்தையின் துக்கச் செய்தி கேட்டு நேரிலும் தொலைபேசி மூலமும் அனுதாபச் செய்தி கூறியவர்களிற்கும், எம் குடும்பத்தினருக்கு ஆறுதலாக இருந்து பல வழிகளில் உதவிய உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

