Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Arumaicandralingam Malarrovini Amma

In loving memory of

Arumaicandralingam Malarrovini Amma

Age 67December 22, 1947 – January 1, 2015

Born in
Valvettithurai
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வல்வெட்டித்துறை ஊரணியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருமைச்சந்திரலிங்கம் மலர்ரோவிணி அம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னையே எங்கள் அன்புத் தெய்வமே
ஆயிற்று ஓராண்டு நீங்கள் மறைந்து
மாதம் ஒரு மாசியம் வந்தது
கூடியிருந்து உங்கள் கதைபேசி உண்டோம்!

பாலுடன் பாசத்தை ஊட்டி வளர்த்தவரே
பரிதவிக்கிறோம் பாசத்தை இழந்து
உங்கள் ஆசியால் பெற்ற உயர்கல்வியால்
உவகை கொள்கிறார்கள் பேரப்பிள்ளைகள்!

எங்கள் இதயங்கள் இன்பச்சுமையால் கனக்கின்றன
அங்கே சிம்மாசனம் போட்டு நீங்கள் வீற்றிருப்பதால்
எங்கள் நாடி நரம்பெல்லாம் ஓடித்திரிகிறீர்கள்
சற்றே ஓய்வெடுங்கள் அம்மா!

நின்றால், நடந்தால், இருந்தால் உங்கள் நினைவுகள்
உறங்கினால் உங்கள் கனவுகள்
சந்திரனில் உங்கள் முகத்தைப் பார்க்கிறோம்
சந்திரன்தான் தினமும் வருவதில்லையே!

நித்தம் ஏற்றுகிறோம் குத்து விளக்கை
அதன் ஒளியில் உங்கள் வண்ணமுகம் காண

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிராத்திக்கின்றோம்!

உங்கள் பிரிவால் துயருறும்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 21-12-2015 திங்கட்கிழமை அன்று 82, White House Cre's, Brampton, Canada என்னும் முகவரியில் நடைபெறும். இந் நிகழ்வில் உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.