கண்ணீர் அஞ்சலி

In loving memory of
Arunachalam Subramanium
September 6, 2010
- Born in
- Kodikamam
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொடிகாமம் புகையிரத நிலையவீதியைப் பிறப்பிடமாகவும், பம்பலப்பிட்டி கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் சுப்பிரமணியம் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
06.09.2010 அன்று சிவபதமடைந்த அன்னார் சிறந்த கல்விமானாகவும், கொழும்பு, அனுராதபுரம், யாழ்ப்பாணம், வவுனியா நில அளவை அலுவலகங்களில் பட வரைஞராகவும், நிர்வாக உத்தியோகத்தராகவும் பணிபுரிந்தார். பின்னர் பகுதி நேர ஆங்கில ஆசிரியராகவும் சேவை செய்தார்.
சிறந்த குடும்பத்தலைவராகவும், உறவினர், நண்பர்கள், அயலவர்களுடன் அன்புடன், பண்பாகப் பழகி எல்லோராலும் கெளரவமாக மதிக்கப்பட்டார்.
எமது குடும்பத்தலைவனாகத் திகழ்ந்து எல்லா உதவியும், ஒத்தாசையும், சிறந்த ஆலோசனையும் புரிந்த எங்கள் பாசத்துக்குரிய சித்தப்பாவின் இழப்பு எம்மை மீளாத துயரில் ஆழ்த்தியுள்ளது.
அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களுடன் நேரடியாகத் துயரைப் பகிர்ந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் இவ்வஞ்சலி மூலம் எமது கண்ணீர்த் துளிகளைக் காணிக்கையாக்கி அஞ்சலி செலுத்தி,
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய கச்சாய் மருதடி விநாயகரை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்.
— "சித்திப்பாவின் பாச நினைவலைகளுடன்" சு. தங்கமயிலோன் குடும்பம்(பிரான்ஸ்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

