நினைவஞ்சலி

In loving memory of
Asirvatham Mary Ritta
RANJITHAM
Age 76November 16, 1935 – June 24, 2012
- Born in
- Valvettithurai
- Lived in
- Valvettithurai, Ilavalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவல்வெட்டித்துறை நெடியகாடு பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இளவாலை மாரீசன்பதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆசீர்வாதம் மேரி றீற்ரா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்முன்னே வாழ்ந்த தெய்வம்
மறைந்து ஆண்டு பத்து ஆனதம்மா!
பொன்னும் பொருளும்கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின்தாய்மடியைத் தருமா??
கருப்பைக்குள்ளிருந்து நாம்காலுதைத்த போது...!
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!
இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம் துறந்து
மகிழ்ந்திருந்தாய் அம்மா…!
நீ இல்லாமல் அரண்மனையாய்
இருந்தாலும் அநாதையாய் தவிக்கின்றோம்…!
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?
இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும்
அன்போடு எமை ஆழ்வாய்!
என்றென்றும் எழிலோடு- எம்நெஞ்சிலெ
நீ வாழ்வாய்!
உங்கள் ஆத்மா சாந்திக்காகப்
பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

