மரண அறிவித்தல்

In loving memory of
Balasubramniam Krishnadevi
Age 62November 5, 1955 – March 30, 2018
- Born in
- Manipay
- Lived in
- Manipay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாய் நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் கிருஸ்ணதேவி அவர்கள் 30-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காங்கேசன் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலசுப்பிரமணியம்(பாலா) அவர்களின் பாசமிகு மனைவியும்,
தாட்ஷாயினி(அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் - முல்லைத்தீவு), ஜனனி(பிரான்ஸ்), கீர்த்திகா(ஆசிரியை - மானிப்பாய் தனியார் ஆங்கில பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்மாதேவி(நவாலி), இந்திராதேவி(கொழும்பு), வில்மாதேவி(நவாலி), சுகிர்தா(சுவிஸ்), சிறிவரதன்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டினேசன்(நீதிமன்ற உத்தியோகஸ்த்தர் - முல்லைத்தீவு), சிவா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிறேம்குமார், விஸ்வாம்பரம், சௌந்தரராஜன், யோகராஜா(சுவிஸ்), கோகிலாம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விஸ்ணிகன் அவர்களின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆரியம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

