1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Chellappa Selvaratnam
Age 88June 5, 1921 – February 12, 2010
- Born in
- Nallur
- Lived in
- Mullai Mulliyavalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை அம்பாள் களஞ்சியத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா செல்வரெட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
யாழ் கல்வியங்காட்டில்
பிறந்து வாழ்ந்து கல்வி கற்று
தொழில் புரிவதில் நாட்டம் கொண்டு
செய்தொழிலில் செல்வமீட்டி
சிறப்புடன் வாழ்ந்தீர்கள்...
மணம் புரிந்த மண்ணிலும்
வாழ விரும்பி புறப்பட்டீர் முள்ளியவளைக்கு.
ஊக்கமுடன் தொழில் செய்து
உவகையுடன் வாழும் நாளில்.
காலத்தின் கொடுமையால்
நான்கு புதல்வர்களையும்
நாட்டை விட்டு
அனுப்பிவிட்டீர் வெளிநாட்டிற்கு
இறுதிக் காலம்வரை
மிகுதி மூவருடனும் வாழ்ந்து வந்தீர்கள்...
எதிலும் திருப்பி காணும்
நீங்கள் இறப்பிலும் திருப்பி கண்டீர்
பிறந்த ஊரிலுள்ள வீட்டிலே
எம்மைவிட்டு நீங்கி ஓராண்டாகியும்
நீங்கவில்லை உம் நினைவு
எம் மனதை விட்டு.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
— பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

