மரண அறிவித்தல்

In loving memory of
Chelliah Navaratnam
Age 74September 11, 1943 – February 27, 2018
- Born in
- Thunnalai
- Lived in
- Kandy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கண்டியை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா நவரட்ணம் அவர்கள் 27-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, ஞானம்பிகை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற ஆறுமுகம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,
லக்ஷ்மி(பேபி), கீதா, பவாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவமோகன், இராமகிருஷ்ணன், மற்றும் இரத்தினசோதி, நாகபூசணி, செம்மனச்செல்வதி, அருள்முகவரதன், ஜெயலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிலந்த, காலஞ்சென்ற பிறேமசிங்(மகிந்த), மற்றும் சுமேத டயஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தினுக், மனில்க, யனிஸ்க, கவிந்து ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-02-2018 புதன்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்டி மகியாவ மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

