நினைவஞ்சலி

In loving memory of
Chentoori Chanthirakumar
Age 24November 24, 1990 – July 29, 2015
- Born in
- South Harrow
- Lived in
- Stock Wood
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceலண்டன் South Harrow வைப் பிறப்பிடமாகவும், Wood stock Oxford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செந்தூரி சந்திரகுமார் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கும் நீ நிறைந்தே கண்மணி
எமை விட்டு ஏன் நீங்கினாய் கண்ணே நீ?
பொங்கும் விழி நீர் துடைக்கும் - உன்
பூவிரல்கள் எங்கே கண்மணி?
வண்ணங்கள் பல காட்டிவழி
நெடுகச் சிரிப்பூட்டி - இன்று
விழி சொரிய விட்டுவிண்ணேறிச்
சென்றதேனோ?
இன்னும் தான்ஏற்கமுடியவில்லை–நீ
இல்லை என்பதை
வலியைத் தாங்கி விட
இதயத்திற்கு முடியவில்லை
வலிந்து ஏற்றுவிட
மனதில் துணிவுமில்லை
மொத்தமாக உன்னை
வாரிக் கொடுத்துவிட்டு
விழியோரம் எந் நாளும்
கண்ணீர் சுமக்கின்றோம்!
காலங்கள் பல மாறும் - எம்
கோலங்கள் தடுமாறும் - உன்
பாலமுகம் மட்டும் என்றும்
காலமின்றி எம்முடன் வாழும்
என்றும்
உம் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

