மரண அறிவித்தல்

In loving memory of
Christina Pusparani Selvanayaga
Age 65December 24, 1952 – February 21, 2018
- Born in
- Nelliyadi
- Lived in
- Nelliyadi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி நெல்லியடி பண்டித்தறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்ரினா புஸ்பராணி செல்வநாயகம் அவர்கள் 21-02-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை இராயப்பு(பண்டித்தறை) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் கிரிஸ்ரினா தம்பதிகளின் அன்பு மகளும்,
அன்ரன் செல்வநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
மேரி உஷாந்தினி(நோர்வே), ஸ்ரிவன்(லண்டன்), கிறேஸ் குமுதினி(திருச்சி இந்தியா), சாள்ஸ் இன்பதாஸ்(கரவெட்டி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்ரன் அமலதாஸ்(நோர்வே), உமேஸ்(கட்டார்), பிறேமினி(லண்டன்), அனுஜா(கரவெட்டி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பற்றிக், நிவேதா(நோர்வே), கிஷோர்(இந்தியா), றொசான், துசான்(லண்டன்), தானியா(கரவெட்டி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு புனித அந்தோனியார் ஆலயத்தில் மு.ப 10:00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கீரிப்பல்லி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

