5ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
clinton churcill
Age 19May 12, 1996 – April 1, 2016
- Born in
- Mullai Puthukkudiyiruppu
- Lived in
- Italy, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, லண்டன் Hereford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிளிங்டன் சேர்ச்சில் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவே மகனே
அலையும் அடித்து ஓய்ந்தது
காற்றும் வீச மறந்தது
கடவுளும் கல்லாய் போனானே
எம் செல்லம் கால் பதித்த போது
காத்திருந்து காலனவன் சதி செய்தானே?
என் செய்வேன் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை போன திசை
எது என்று தெரியாது?
மொட்டாகி பூவாகி காயாகி கனியாகும்
வேளையில் காத்திருந்து படைத்தவன்
பழி தீர்த்தானோ ?
நாம் ஆற்றுவதற்கு வார்த்தையில்லை
சாவதற்கு காலனவன் வரவில்லை
இருண்ட இவ்வுலகில் வாழவும் முடியவில்லை
சாகவும் முடியவில்லை செய்வது
எது என்று தெரியாது தவிக்கின்றோம் ஐயா!
நின் திருவுருவம் என்றென்றும் எம்முன்
ஆண்டவனாய் ஜென்மம் எல்லாம் இருக்கும் ஐயா!
ஆத்ம திருப்திக்காய் ஆண்டவனை வேண்டுகின்றோம்
என்றென்றும் உன் நினைவால் வாடும் என்றும்
உன் அன்பு உள்ளங்கள்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

