31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Eatvet Mohanarani
Age 48September 27, 1962 – November 21, 2010
- Born in
- Batti Periyakallaru
- Lived in
- Batti Periyakallaru
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு பெரியகல்லாறைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எட்வேட் மோகனராணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
அன்னையே எங்களின் ஆருயிர் தாயே!
விண்ணையே நோக்கி நீ விரைந்திட்டதால்
விழிகள் நித்தம் கண்ணீரால் நிறைகிறது
மண்ணில் நல்மாதரசியாய் வந்து அவதரித்தாய்
கண்ணின் மணிபோல் எமைக்காத்து நின்றாயம்மா
ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும்
அவனியில் காணக்கிடைக்காத தெய்வம் அம்மா
உலகில் நாம் பவனிவர - எம்
உயிர்தனை பரிசாக அளித்தவள் நீயே
காலன் அவன் ஆசை கொண்டானோ -
உன் பாசம் தனில்
காத்து சென்றானோ உன் உயிர்தனை
காலம் காலமாய் வாழும் உன் நினைவுகள்
காத்திருக்கின்றோம் மீண்டும் நீ வருவாயென...
அன்னாரின் பிரிவுத்துயர் கேட்டு எங்கள் இல்லத்திற்கு நேரில் வருகைதந்தும், தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு ஆறுதல் கூறியவர்களுக்கும், அன்னையின் பூதவுடலிற்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிக்கிரியைகளில் கலந்துக்கொண்டவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்கள் வெளியிட்டும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியும் அஞ்சலி தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மற்றும் பல வழிகளிலும் உதவிய அனைவருக்கும் எங்கள் இதயம் நிறைந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

