Aruthal

மரண அறிவித்தல்

Photo of Elaiyathambi Gunasingam

In loving memory of

Elaiyathambi Gunasingam

Age 81March 16, 1935 – May 1, 2016

Born in
Thunnalai Center
Lived in
Thunnalai Center

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். துன்னாலை மத்தி தாமரைக் குளத்தடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி குணசிங்கம் அவர்கள் 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், முருகேசு, காலஞ்சென்ற இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற இரவீந்திரன், ரமணன்(அவுஸ்திரேலியா), சாந்தினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற காராளசிங்கம், பாருவதிப்பிள்ளை, கனகசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சத்தியேஸ்வரி, ஜோகநாதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அருட்செல்வராஜா, சறோஜினிதேவி, ஞானதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிந்துஜா, பபிந்தன், நிதியா, தர்மிகா, பிரிஜங்கா, சுபேதன், சரவிந், ஜனாவிந் ஆகியோரின் அன்பு பெரியத்தந்தையும்,

பிரகவி, சிரஞ்ஜீவ் ஆகியோரின் செல்லப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேருண்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.