Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Elaiyathambi Singanayagam

In loving memory of

Elaiyathambi Singanayagam

Age 86April 19, 1930 – July 1, 2016

Born in
Batticaloa
Lived in
Batticaloa

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி சிங்கநாயகம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தீரன்றோ!
தெய்வத்துள் இருந்தெம்மைத் தேற்றுவீரே!

எங்கள் குடும்பத் தலைவர் சிவபதம் அடைந்த செய்தி அறிந்த உடனே உதவி புரிந்த அன்பர்களுக்கும், இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் மற்றும் உள்நாடு வெளிநாடுகளிருந்தும், தொலைபேசி மூலமாகவும், மின்னஞ்சல், குறுந்தகவல்கள் மூலமாக துயர் பகிர்ந்தவர்களுக்கும், துண்டுப் பிரசுரம் மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், பதாதைகளை காட்சிப்படுத்திய திணைக்களங்கள் மலர் வளையங்களை சாத்தி கெளரவித்தவர்களுக்கும், உணவு வழங்கிய அன்பர்களுக்கும், அபரக்கிரியைகளுக்கான சகல ஒத்துழைப்பு அளித்தவர்களுக்கும், இரங்கல் உரைகளை நிகழ்த்தியவர்களுக்கும், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், மூன்றாம் நாள் கிரியைகளில் பங்கு கொண்டவர்களுக்கும் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் ஆத்மசாந்தி கிரியைகள் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

உங்கள் ஆத்மா இறைஅடி சேர என்றும் துதி பாடும் குடும்பத்தினர்!

வீட்டு முகவரி:
இல 15/1,
பிள்ளையார் கோவில் வீதி,
கல்லடி,
மட்டக்களப்பு.

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.