1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Flora Pandian
Age 76April 9, 1938 – January 11, 2015
- Born in
- Hatton
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஹட்டன் மல்லிகைப்பூவைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த புளோரா பாண்டியன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்தபோது கண்முன்னே
அம்மாவின் பாசநினைவுகள் தான்!
தாங்கிப் பிடிக்கின்றன மனதை!
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகிறேன்
இனிய தாயாக இல்லறத்தில்
வாழ்ந்தீர்கள் அம்மா!
ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள் அம்மா!
ஆண்டு ஒன்று சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!
ஆறாத்துயிலில் கலந்திருக்கும்
உங்கள் பாதங்களில்
கண்ணீர்த் துளிகளாலே ஆராதனைகள்!
உங்களின் ஆத்மா சாந்தியடைய
நெஞ்சுருகி வேண்டியபடியே....
அன்னாரின் நினைவு ஆராதனை 16-01-2016 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Christ Church, Dickoya, Srilanka என்னும் முகவரியில் நடைபெறும் இந்நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— கணவர், பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

