1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ganapathipillai Kanmaniamma
Age 72
- Born in
- யாழ் நீர்வேலி தெற்கு
- Lived in
- யாழ் நீர்வேலி தெற்கு
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீர்வேலிதெற்கு கந்தசுவாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை கண்மணியம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னையே எங்கள் அன்புத் தெய்வமே
ஆயிற்று ஓராண்டு நீங்கள் மறைந்து
மாதம் ஒரு மாசியம் வந்தது
கூடியிருந்து உங்கள் கதைபேசி உண்டோம்!
பாலுடன் பாசத்தை ஊட்டி வளர்த்தவரே
பரிதவிக்கிறோம் பாசத்தை இழந்து
உங்கள் ஆசியால் பெற்ற உயர்கல்வியால்
உவகை கொள்கிறார்கள் பேரப்பிள்ளைகள்!
எங்கள் இதயங்கள் இன்பச்சுமையால் கனக்கின்றன
அங்கே சிம்மாசனம் போட்டு நீங்கள் வீற்றிருப்பதால்
எங்கள் நாடி நரம்பெல்லாம் ஓடித்திரிகிறீர்கள்
சற்றே ஓய்வெடுங்கள் அம்மா!
நின்றால், நடந்தால், இருந்தால் உங்கள் நினைவுகள்
உறங்கினால் உங்கள் கனவுகள்
சந்திரனில் உங்கள் முகத்தைப் பார்க்கிறோம்
சந்திரன்தான் தினமும் வருவதில்லையே!
நித்தம் ஏற்றுகிறோம் குத்து விளக்கை
அதன் ஒளியில் உங்கள் வண்ணமுகம் காண
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிராத்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும் கணவர்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

