31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Ganapathippillai Gunarasa
Age 74November 25, 1935 – July 28, 2010
- Born in
- Trincomalee
- Lived in
- Achchuveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை குணராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
எம் பாசமிகு தந்தையே
எங்களை விட்டுப் பிரிந்து
31 நாள் கடக்கின்றன
உங்கள் நினைவுகள்
நெருக்கியே வருகின்றன.
அன்பின் திருவுருவாய்
பண்பின் உறைவிடமாய்
கடமைமிகுத் தலைவனாய் இருந்து
நேர்மையாக வாழ்ந்து
வெற்றிகள் பல பெற வித்திட்ட
தன்னிகரில்லா தந்தையே!!
கடமைகள் யாவும் முடிந்து விட்டாயென
கால் பிடித்த விநாயகன் தன் காலடியில்
ஒரு நொடியில் அழைத்து விட்டானே
இதை எப்படி தாங்குவோம் அப்பா...
உங்களின் இழப்பைத் தாங்க முடியாமல்
தவிக்கும் நாங்கள் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
மண்ணைவிட்டு மறைந்தாலும்
எங்கள் மனங்களைவிட்டு
என்றென்றும் நீங்கள்
மறையமாட்டீர்கள் அப்பா...
— மனைவி, சகோதரி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள், பெறாமக்கள்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

