1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Gnanasekaram Ratheeswaran
Age 43September 26, 1973 – February 23, 2017
- Born in
- Aarukalmadam
- Lived in
- London, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டை ஆறுகால்மடத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானசேகரம் ரதீஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் பிறப்பிடமாய் பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமை மகனே ரதீஸா!
எம்மையெல்லாம் தவிக்கவிட்டுச் சென்று
ஓராண்டு காலம் வந்ததே ஐயா!
எல்லோர் மனதிலும் என்றும் அணையாத
தீபச்சுடராய் வாழ்ந்து கொண்டிருக்கும்- நீர்!
பெற்ற அன்னையை உன் பிரிவால்
பரிதவிக்க விட்டு நீண்ட தூரம் போனதேனோ?
கட்டிய மனையாள் கலங்கி நிற்க- நீ
கண்காணாத தேசம் சென்றதேனோ? - நீர்
பெற்ற பிள்ளைகள் பாசத்துக்கு ஏங்கி நிற்க- நீ
பாதியில் பிஞ்சுகளை மறந்ததேனோ?
பிள்ளைகளின் பாசம் என்றால் அது
நீயல்லவே... உன்னிடம் அல்லவா அந்த
படிப்பினையை நாங்கள் கற்றுண்றோம்
மறக்க முடியாது உன் பாசப்பிணைப்பை!
உன் சகோதரர்கள் ஏற்றமுடன் வாழ
ஏணியாய் நின்றாயோ... நீர் எம்மை விட்டு
அகலவில்லை நீர் எம்முடன் இருந்த
நினைவலைகள் வாட்டி வதைக்கின்றன!
ஊர்விட்டு ஊர்வந்து எல்லோரிடத்திலும்
அன்பானவனாகவும் நீர்
இருக்குமிடத்தில் கலகலப்புடனும்
மற்றவரின் கஸ்ட துன்பங்களைக் கண்டு
இன்னல்களைத் தீர்த்தவரே!
ஐயோ என்ற அலறல் ஒலித்த- ஒலி
இன்னும் ஓயவில்லை எம் மனதில்!
நீர் எங்கு ஓடி மறைந்தீரோ!
ஓயாது உம் நினைவுகள் எம் மனதில்!
ஆண்டுகள் எத்தனை ஆனாலும்
அகலாது உன் பிரிவு
மறக்கமுடியுமோ? எம்மையெல்லாம்
ஆழாத்துயரத்தில் ஆழ்த்திவிட்டு
மீளாமல் சென்றுவிட்டாயே!
எம் அன்புத்தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உன் நினைவுகளுடன் வாழும்!
அம்மா, சகோதரர்கள், மனைவி, பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

