மரண அறிவித்தல்

In loving memory of
Gnaneswary Kanthasamy
Age 85September 9, 1935 – March 15, 2021
- Born in
- Malaysia
- Lived in
- Urelu, Colombo, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேஷியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். ஊரெழு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி கந்தசாமி அவர்கள் 15-03-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, அழகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் கந்தசாமி(இளைப்பாறிய சுங்க இலாகா அதிகாரி- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தி(கனடா), பாலகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்தகுமார், ஷெரின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, திருச்செல்வம், சிவசுந்தரம், திருநாமச்சந்திரன், ஜெயகிரிஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ப்ரஜித், ஜனனி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

