மரண அறிவித்தல்

In loving memory of
Gobalapillai Kugan
Age 32October 30, 1985 – May 18, 2018
- Born in
- Velanai 8th Ward
- Lived in
- Kantharmadam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் இந்து மகளிர் கல்லூரி ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை குகன் அவர்கள் 18-05-2018 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை, கந்தையா இராசம்மா ஆகியோரின் அன்புப் பேரனும்,
கோபாலபிள்ளை பகீரதி தம்பதிகளின் அன்பு மகனும்,
சியாமளா(ஆசிரியை- வேலணை மேற்கு நடராசா வித்தியாலயம்), மஞ்சுளா(ஆசிரியை- உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயம்), காலஞ்சென்ற சுபாஸ்கரன் மற்றும் சுபாஜினி(இலங்கை வங்கி- சுன்னாகம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜனார்த்தனன்(கொழும்பு), ரவிச்சந்திரன்(காலி வர்த்தகர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கந்தையா(டிக்கோயா வர்த்தகர்) மற்றும் அன்னபூரணி, நாவேந்தன், விஜயலட்சுமி(ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
சதாசிவம், சாரதாமணி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
டினுசங்கரன், தனுசங்கரன், சஜீவன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணிக்கு வேலணை மேற்கு அம்பலவி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 42, இந்து மகளிர் ஒழுங்கை,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

