2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Indhumathi Rooth Sundharalingam
Age 55November 7, 1960 – December 31, 2015
- Born in
- Sri Lanka
- Lived in
- Australia, United States
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு, அவுஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இந்துமதி ரூத் சுந்தரலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் இந்திராணியம்மாள் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
அருந்ததி, தமயந்தி, வசந்தி, வளர்மதி, உதயகுமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வேல்சிவானந்தன், காலஞ்சென்ற லயனல் செல்வேந்திரன் ஹலொக், ராதாகிருஸ்ணன், சுகந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இந்திரன், அகல்யா, அபிராமி, அங்கையன், அமிர்தினி, அரவிந்த், அருளினி, அருள்மொழி, கனிமொழி ஆகியோரின் பாசமிகு Aussie Aunta வும் ஆவார்.
அன்பும் ஆதரவும் கொண்ட எங்கள் அன்புச் சகோதரியே இந்து !
ஈராண்டுகள் ஓடி மறைந்தாலும் எம் உள்ளங்களில் இன்றும்
ஓளிவிளக்காகத் தான் பிரகாசித்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.
எங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு கணப்பொழுதிலும் – நீங்கள்
எங்கள் மீது காட்டிய அன்பு, பாசம், பரிவு அனைத்தையும்
பசுமையாக இன்றும் உணர்கின்றோம் - அன்புத் தெய்வமே !
நீங்கள் எங்கள் சகோதரியல்ல – அன்புத்தாய் அம்மா !
எம் பிள்ளைகளுக்கெல்லாம் Aussie Aunta என்ற
பாசமலராகத் தான் திகழ்ந்தீர்கள்.
அன்று மட்டுமல்ல இன்றும் ஒளிவிளக்காக
எம் வாழ்க்கைக்கு வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்.
விண்ணுலகத்தில் இருந்து எங்கள் எல்லோரையும் ஆசீர்வதியுங்கள் தாயே !
ஓம் சாந்தி ! சாந்தி ! சாந்தி !
உங்கள் நினைவுகளோடு வாழும் அன்புச்சகோதரர்கள்,
மைத்துனர்கள், பெறாமக்கள், மருமக்கள்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

