1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Iyaakutty Thirunaavukarasu
Age 76March 8, 1933 – April 20, 2009
- Born in
- Mannar Puthukudiyiruppu
- Lived in
- Mullai Puthukkudiyiruppu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஐயாக்குட்டி திருநாவுக்கரசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற ஐயாக்குட்டி அன்னப்பிள்ளை தம்பதிகளின் மகனும்,
மனோன்மணியின் அன்புக் கணவரும்,
இராசசிங்கம், விமலாதேவி, சறோஜினிதேவி, பேராதனசிங்கம், குணதேவி, தவசிங்கம், கேதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவராஜா, சவுந்தரராஜன், கோணேஸ்வரன், பாசமலர், இந்துமதி, மோகனலோஜினி, ஜெயப்பிரியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நாகேஸ்வரி, சரவணமுத்து, வசந்தாதேவி, காலஞ்சென்ற விநாயசிங்கம், சிவபாக்கியம், சின்னம்மா, பாலகிருஷ்ணன், பத்மநாதன் ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
ஆனந்தி, அனித்தா, தார்மீகன், இலக்கியா, துவாரகா, தாரணி, தர்மினி, கபிசன், அஸ்வினி, சசிதரன், தர்சினி, லிங்கேஸ்வரன், தனுஷியா, திவானா, கிருஷ்ணா, திவ்யராஜ், டினோயிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,
கேனுஜன், சனோஜ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
எங்கள் ஐயாவைப்பற்றி நாம் சொல்ல வார்த்தையில்லை
சொல்லுவதென்றால் ஆயிரமாயிரமாய் லட்ச லட்சமாய்
வார்த்தைகள் உதிர்க்கிறது அதையும் மீறி கோடானு கோடியாய்
கண்ணீர்த் துளிகள் தாரை தாரையென கன்னத்தில் வழிகிறது.
ஐயா! மிகப்பெரிய ஆதாரமாக மிகப்பெரிய வலிமையாக
பிரியமாக பரிவாக ஓயாது பொழிந்து
பயிர் வளர்க்கும் நன் மழைபோல்
தன்னைப் பொழிந்து எங்கள் எல்லோரையும் வளர்த்தவர்.
எங்கள் வாழ்வில் நாம் மேன் நிலைபெற
தன்னை வருத்தி வாழ்விலே சுகம் காண்பவர்
எங்கள் ஐயா தோட்டந் துரவெனவும்
தென்னந் தோப்புகளிலும் வயல் காட்டினிலும்
வாழ்வைத் தேடியவர்.
ஐயா! ஒரு நாள் நாம் ஊருக்கு வருவோம்
அப்போது உங்கள் குரல் தோப்புகளில் ஒலிக்கும்
உங்கள் காலடி இன்னும் உழவு சால்களில் இருக்கும்
மிளகாய்த் தோட்டத்திலும் வயல் வரம்புகளிலும்
உங்கள் பிரியம் எம்மை வரவேற்கும்.
ஐயாவோடு நாம் வாழ்ந்த கடந்துபோன காலங்கள்
மனதோடு எப்போதும் அழிந்திடாமல் அலைக்கிறதே
எப்பிறப்பில் காண்போம் எங்களினிய ஐயாவை
இனி எப்போதும் எம் மனதில் இன்பமேதும் இல்லை ஐயா!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

