45ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Iyampillai Veerakaththi
Age 49July 3, 1926 – November 28, 1975
- Born in
- Analaitivu
- Lived in
- Pungudutivu 6th Ward
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த அவர்களின் 45ம் ஆண்டு நினைவஞ்சலி.
உறவுமுறை கூறி உறவாடும் உத்தமரே
உங்கள் உள்ளம் அது வெள்ளை தானே!
உயர்வான குணங்கள் பல கொண்டவரே
உதிரும் புன்னகை கொண்டு எம்
துன்பம் தனை துடைப்பவரே!
நீர் இவ்வுலகில் நேர்வழி காட்டி
நாம் சென்ற பாதையெல்லாம்
நல்லவராய் வேண்டுமென்று
கண்மணி போல் காத்திருந்த
எம் தந்தையே! எங்கு சென்றாய்?
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
மறைந்தும் மறையா எங்கள்
ஆதவப்பெரும் ஜோதியே!
உங்கள் ஒளிக்கீற்றில்
நாங்கள் வாழ்வது போல்...
எங்கள் உயிர் மூச்சில்
நீங்களும் எம்முடன்
இன்னமும் வாழ்கிறீர்கள்!
எங்கள் நெஞ்சமதில் நிறைந்திருக்கும்
அன்புத் தெய்வத்தின் பொற்பாதத்தில்
மலர்தூவி மலர் அஞ்சலி செய்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

