2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Iyaththurai Nageswaran
Age 43November 20, 1964 – October 29, 2008
- Born in
- Jaffna
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ் சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் ஐயாத்துரை நாகேஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இரண்டாயிற்று ஆண்டுகள் - அத்தான்
என்றழைத்து மகிழ்ந்து நான்,
நின்றாயிற்று நினைவுகள்
நீங்காது உமைச்சுமந்து,
ஒன்றாயிருந்திடலாம் - நன்றாய்
பல காரியங்கள் செய்திடலாம்,
என்றாயிரம் எண்ணங்கள் கூறி – எனை
அழைத்தீர் – ஏங்கவிட்டு
ஏன் மறைந்தீர்?
பெரு நிழல் கொண்ட விருட்சத்தில்
வந்தமரும் பறவைகளாயிருந்தோம் - உம்
அருநிழலில் தானே நாமிருந்துயர்ந்தோம்,
ஒரு துயர் கண்டதில்லை
நெருங்கி நீங்கள் இருந்தவரை - அப்பா,
கலங்கி கதறுகிறோம் கதியற்று தவிக்கிறோம்.
கருக்கொள்ளும் கவலைகளை
களைந்தெறிந்திட மீள – எம்மோடு
உருக்கொள்வீரோ அப்பா.
— என்றும் உங்கள் பிரிவால் தவிக்கும் :- மனைவி, பிள்ளைகள் மற்றும் மச்சான்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

