1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Iyyathurai Varatharajah
Age 50December 4, 1958 – April 23, 2009
- Born in
- Nayanmarkaddu
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநாயான்மார்கட்டை பிறப்பிடமாகவும், ஜேர்மனி எசனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை வரதராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், ஐயாத்துரை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாளினி, அனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சங்கரப்பிள்ளை, பரணிரூபநாதன், ஜெகநாதன், யோகேஸ்வரி, தனலட்சுமி, நித்தி ஆனந்தன், அருளானந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
பரமேஸ்வரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
தரோஸ் அவர்களின் நேசமிகு பேரனும் ஆவார்.
ஓராண்டு ஓடி மறைந்து விட்டாலும்
நேசங்கொண்ட உங்கள் மகன்மார் நாங்கள்
உங்களைத் தேடுகின்றோமே சித்தப்பா!
உங்கள் வருகை காணாது
உங்கள் குரல் கேட்காது ஏங்கி
தவிக்கின்றோமே சித்தப்பா!
உங்கள் சிரிப்பும் உயர்வான பேச்சும்
என்றும் எங்களை விட்டு நீங்காது சித்தப்பா!
பாசமிகு இல்லற வாழ்வை விட்டு விரைந்து
எங்குதான் பறந்து சென்றீர்களோ அப்பா?
இறகு இழந்த பறவையாய் தவிக்கின்றோமே!
பாசமாய் கூடி வாழ்ந்த கூட்டை விட்டு
எங்குதான் பறந்து சென்றீயோ எங்கள் சகோதரனே?
உன் நினைவல் தினம் கலங்கி நிற்கின்றோமே!
மீண்டும் எங்களிடம் வருவயா என்று
ஏங்கி தவித்து நிற்கின்றோமே.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

