மரண அறிவித்தல்

In loving memory of
James Joseph
Age 74April 14, 1942 – January 15, 2017
- Born in
- Kurunagar
- Lived in
- Kurunagar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஜேம்ஸ் ஜோசப் அவர்கள் 15-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜேம்ஸ் அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு ரோஸ்மேரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற லூத்தம்மா(லூர்தாச்சி) அவர்களின் அன்புக் கணவரும்,
ரதி, ஜெயா, கெனடி, சோமா, மெரினா, ஜஸ்மா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மேரி மாகிறேற், துரைரட்ணம், மற்றும் ஜெயமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாபு, ஆனந்தன், டயானா, ரவி, காலஞ்சென்ற லோர்மன்லடிஸ், மற்றும், கொலின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
எட்வேட், கெளரி, ஜெயாவதி, வசந்தி, கில்பெர்ட், வவி, கொலஸ்டிகா, சுகந்தி, ரொபெர்ட், சுதா, கியூபெர்ட், காலஞ்சென்ற சந்திரா, சுரேன்,ராஜி ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்ற அருமைத்துரை, மரியநாயகம், காலஞ்சென்றவர்களான சிங்கராயர், மேரிப்பிள்ளை, மனுவேல், செலதின், எட்வர்ட், குருகீலம், ஜேக்கப், குக்கனா, மற்றும் மாசிலா, அமரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மொறின், சுஜி, பாமினி, கிந்து, வினி, நோர்மன்,நிலான், டிலான், காலஞ்சென்ற கிளின்டன்,ஜென்சியா, செல்சியா, ஜெனிபர், லிதியா, சொப்னா, இவோன், கெனற், மீனா, அஜித் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
வென்சஸ் பெர்ணான்டோ, பெபியோ பெர்ணான்டோ, அபினயா, ஜொய்லின் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 17-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் யாழ்ப்பாணம் புனித மரியன்னை தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 498,
கடற்கரை வீதி,
குருநகர்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

