45ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Jeyaratnamalar Kanagarathinam
Age 74December 25, 1934 – August 20, 2009
- Born in
- Madduvil
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolence"கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம்
அவர் பார்வைக்கு அருமையானது"
சங்கீதம் 116: 15
மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரட்ணமலர் கனகரத்தினம் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும் ஆராதனையும் நன்றிநவிலலும்.
அன்பு, பண்பு, பாசம், அமைதி இவற்றிற்கெல்லாம் எடுத்துக்காட்டாய் நின்று எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்துவிட்ட அம்மா! உங்களது சிரிப்பும் பேச்சும் எல்லோரது உள்ளத்திலும் மாறாத நினைவாக நிற்கின்றது.
நல்ல மனைவியாய் பாசமிகு தாயாய், பரிவுமிகு பேத்தியாய், அன்பான சகோதரியாய், மனமுவந்த சிநேகிதியாய் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை எம் இதயத்தில் பதிந்துவிட்டது.
நீங்கள் விட்டுச்சென்ற இவையாவும், ஆண்டவருக்குள் எம்மை வழிநடத்த உதவும் என்று நம்பி எமது துன்பத்தை மறக்க முயல்கிறோம்.
எமது அம்மாவின் இறுதி அஞ்சலி ஆராதனைக்கு சமூகம் தந்நதவர்களுக்கும், மலர்வளையம் சாத்தியவர்களுக்கும், தொலைபேசியில் அழைத்து அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், இன்னும் மறைமுகமாக உதவிசெய்த யாவர்க்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
எமது அம்மாவின் நன்றி செலுத்தும் ஆராதனை 03.10.2009 சனிக்கிழமை அன்று பிற்பகல் 5:00 மணிக்கு 4130 Lawrence Ave, East இல் அமைந்துள்ள St.Margaret Tamil Anglican Church இல் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் இரவு உணவிலும் கலந்துகொள்ளுமாறு எல்லோரையும் அழைக்கின்றோம்.
— பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

