41ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Joseph Kamilas
Age 66July 18, 1943 – December 13, 2009
- Born in
- Chundukuli
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ் சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசி்ப்பிடமாகவும் கொண்ட ஜோசப் கமிலஸ் அவர்களின் 41ம் நாள் நினைவஞ்சலி.
தேவனடி சேர்ந்த ஜோசப் கமிலஸ்
அவர்களுக்கு எம் நினைவஞ்சலி
"அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்."
குறளுக்கு இலக்கணமாய் வாழ்ந்த பெருந்தகை
செல்வச் சீமான் செழுமை மிகு குடும்பம்
பல்கலை பயின்றவன் ஆங்கிலப்புலமை
கல்வியிற் பெரியவன் கற்றுத் தேர்ந்தவன்
ஆங்கில ஆசிரியராய் பல பள்ளியிலும்
அந்நிய நாட்டிலும் அபாரமாக சேவை செய்தவன்
கரமது ஏந்தி எதையும் பெறாதவன்
உரமது கொண்ட உள்ளம் படைத்தவன்.
புத்திரர், மனைவி, சுற்றம் சூழ
வித்தகனாய் என்றும் ஒன்றி வாழ்ந்தவன்
அத்தனை பாசம் அள்ளிச் சொரிந்ததால்
உத்தமனாய் நீயும் என்றும் உயர்ந்து நின்றாய்
வெள்ளை உள்ளம் உதட்டில் சிரிப்பு
எள்ளு அளவேனும் வஞ்சனை இல்லை
வெள்ளை மனம் போல் பேசிடும் ஆற்றல்
பள்ளிச் சிறாரும் பார்த்து மகிழ்வர்.
— மனைவி, பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

