1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Joseph Savarimuttu
Age 75August 18, 1943 – June 18, 2019
- Born in
- Batticaloa
- Lived in
- Batticaloa
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜோசப் சவரிமுத்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
களைத்திருந்தவரை கண்டார் ஆண்டவர்
களைப்பாற்றி மீண்டும் தொடராமல்
அள்ளி எடுத்தார் தேவன்
அவரின் கரங்களினால்
என்னுடன் வந்துவிடு என்றே....
யாரும் அறியா பெருவலி
ஆயினும் மடங்கா மனவலிமை
நித்தியம் வலியும் வலிமையும்
சந்தித்து ஓய்ந்தன ஒருநாளில்....
இருத்தலுக்கு இடைவிடா போராட்டம்
வீண்போகா ஒன்று அது
கண்ணீரில் கரைந்து கரைந்து
மெதுவாக தேய்ந்து முடிந்தது.
நல்இதயம் நின்றுபோனது ஒருநாள்
ஓய்வேயில்லாத கரம் ஓய்வெடுத்தது
நித்தியமும் தேவனின் இல்லத்தில்
வலிஇல்லாப் பெருவாழ்வு வாய்த்ததே....
என்றும் எங்களின் நினைவிலும்
என்றும் எங்களின் பேச்சிலும்
என்றும் எங்களின் துடிப்பிலும்
வழிகாட்டியாக வாழுவீர்
நாம் மீண்டும் சேரும்வரை....
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்....
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

