மரண அறிவித்தல்

In loving memory of
Josph Anton Jeyakumar
Age 48February 23, 1967 – February 18, 2016
- Born in
- Kayts
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட யோசேப் அன்ரன் ஜெயக்குமார் அவர்கள் 18-02-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற யோசேப், மற்றும் ஞானப்பூ(மணி) தம்பதிகளின் அன்பு மூத்த மகனும்,
யோன்சன் ராஜ்குமார்(ராஜன், ஆசிரியர்- திருக்குடும்ப கன்னியர் மடம், பிரதி இயக்குனர்- யாழ். திருமறைக் கலாமன்றம்), பிறேமிளா ஜெயறோஸ்(நூலகர்- யாழ். இந்து மகளிர் கல்லூரி), மரியா அசம்ரா(சியாமளா, ஆசிரியர்- யாழ் நாயன்மார்க்கட்டு மகேஸ்வரி வித்தியாலயம்), ஜெயராணி மஞ்சுளா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- சமூக சேவைகள் திணைக்களம், கைதடி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
றுஜந்தா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- யாழ். கல்விக்கோட்டம்), உமாகாந்தன்(யாழ். போதனா வைத்தியசாலை), றெஜினோல்ட் சாந்தகுமார்(இலங்கை போக்குவரத்துச் சபை- யாழ்ப்பாணம்), சதீஸ்குமார்(கால்நடை உற்பத்திச் சுகாதாரத்திணைக்களம்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிலக்சிகா, யோய்டிலக்சன், டிலக்சனா, எறின்டீனுஜா, றொகானா, நிதர்சனா, ஷெரொனிக்கா ஆகியோரின் அன்பு மாமாவும்,
அபிஷேக், அனந்திகா, அனோமிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 20-02-2016 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இருந்து பி.ப 02:30 மணியளவில் எடுத்துச்செல்லப்பட்டு நாவலர் புனித ஆசிர்வாதப்பர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 793,
நாவலர் வீதி,
அரியாலை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

