1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Juliyanah Emmanuel
Age 68May 12, 1941 – June 14, 2009
- Born in
- Kurunagar
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட யூலியானா இம்மானுவேல் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா அம்மா என்று தினம் அழைத்து
கனவிலாவது தினம் காண்பதற்கு
ஏங்குகிறோம் அம்மா - ஓராண்டு சென்றதுவே
ஆனாலும் எம் துயர் தீரவில்லையே!
எம் ஆயுள் உள்ளவரை உங்கள் ஞாபகம்
எங்கள் நெஞ்சினிலே நீங்காதம்மா....
ஆறாது ஆறாது அழுதாலும் தீராது
தினந்தோறும் அழுகின்றோம் - தேற்றுவாரின்றி
கடவுள் உம்மை எமக்கு திரும்பவும்
தந்திடமாட்டாரா என்றெண்ணி
எல்லாமுமாய் இருந்த உம்மை
இழக்க மனம் எண்ணிடுமோ..
எல்லாமே கனவென்று எண்ணத்தான் தோன்றிடாதா?
முழுநிலவே உம்முகந்தான் எங்கள் ராசி
எங்கள் மனங்களிலே நீர்தான் -
என்றும் யூலியானா மகாராணி.
பணிய வைத்தாய் உம் பாசத்தைக்காட்டி - இன்று
தவிக்க வைத்தாய் உம் பிரிவைக்காட்டி
அன்பு என்னும் நல்ல தேன் கலந்து - நீர்
ஆக்கித் தந்தீர் நல்லிருந்தில் - அன்று
அமிர்தம் கண்டோம்
சொந்தங்கள் மட்டுமல்ல சுற்ற சூழலும் சொல்கிறது
உமக்காய் சாந்தி சாந்தி சாந்தி
விழிநீர் மழையாக்கி வேதனையில் ஆழ்த்திவிட்டீர் - எம்
விழிநீர் துடைத்திட நீர் விண்ணைத்தாண்டி வருவீரா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— உங்கள் பிரிவைத் தாங்க முடியாமல் தவிக்கும் இம்மானுவேல்(கணவர்), கலா, சுரேஷ், சதீஷ்(பிள்ளைகள்), விமல், பாமா(மருமக்கள்), பிரசாத், வசந்த், புளோறினா, ஸ்ரிபன்(பேரப்பிள்ளைகள்) மற்றும் உற்றார், உறவினர்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

