1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kaladevi Nanthakumar
Age 40November 25, 1968 – February 6, 2009
- Born in
- Chulipuram
- Lived in
- Vavu Pandiyankulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும் நட்டான்கண்டல், பாண்டியன்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கலாதேவி நந்தகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் பாசதீபம் அணைந்தது
வருடம் ஒன்று ஆனது
கப்பலும் கவிழ்ந்தது
கதையும் முடிந்து போனது
துன்பக்கடலில் எம்மை தவிக்கவிட்டாய்
பாருலகில் நம்மைவிட்டு
பரலோகம் பறந்தது ஏன்?
உன்னுயிர் பிரியும் அக்கடைசி
நொடியில் நீ என்ன நினைத்தாய்
எத்தனையோ கற்பனைகள் எத்தனையோ ஏக்கங்கள்
எத்தனையோ நினைவுகள் எத்தனையோ ஆசைகள்
எத்தனையோ எண்ணங்கள் எத்தனையோ சுமைகள்
இவையெல்லாம் உன் மனத்திரையில்
உன்னுயிர் பிரிகையில் உன்னுடன் யாருமில்லை
உனக்கு பாலூட்ட நாமில்லை
உன்னாவி போகையிலே பக்கத்தில் யாருமில்லை
பெருமையென்று எண்ணி பேருலகம் போனாயோ
மகிமை என்று எண்ணி மண்ணுலகை விட்டு போனாயோ
இம்மண்ணில் நீ சிந்திய
குருதியின் ஈரமின்னும் காயவில்லை
எம்மிதயங்களிலுள்ள உன் நினைவுகள் போல
உன் ஆத்மா சாந்திக்காய் என்றும்
இறைவனை மன்றாடுகிறோம்.
— உன்பிரிவால் வாடும் உறவுகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

