Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kamalambigai Kopalapillai

In loving memory of

Kamalambigai Kopalapillai

Age 93July 23, 1924 – April 5, 2018

Born in
Velanai 5th Ward
Lived in
Kondavil

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இராசையா வீதியை வாழ்விடமாகவும், கோண்டாவில் மேற்கு கலட்டி லேனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை கோபாலபிள்ளை அவர்கள் 05-04-2018 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை நகுலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கோபாலபிள்ளை(முன்னாள் வர்த்தகர்- காலி) அவர்களின் அன்பு மனைவியும்,

இரத்தினபூபதி(ஓய்வுநிலை பதவி நிலையாளார்- பரந்தன், இரசாயன கூட்டுத்தாபனம், பரந்தன்), சாட்சாயினி(ஓய்வுநிலை ஆசிரியை), முருகதாஸ்(காசாளார், சாரங்கா நகை மாடம்- யாழ்ப்பாணம்), பரமானந்தன்(ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர்), குமரதாஸ்(பிரான்ஸ்), மல்லிகா(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நகுலேசபிள்ளை, சிவராசா, சாந்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சோதிலிங்கம்(கோண்டாவில்), மற்றும் சச்சிதானந்தபிள்ளை(மண்டைதீவு), சிவகுமார்(கோண்டாவில், தொழிலதிபர்- கொழும்பு), பத்மா(ஆசிரியை- கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலை), ஹேமா(அதிபர்- வுல்வென்டோல் பெண்கள் உயர்நிலைப் பாடசாலை கொழும்பு), நிர்மலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாரதி- ஸ்ரீகரன், கோகுலன் - தனுஷியா, சாரங்கன் - பைரவி, சிந்து- சிவசயந், துளசி- கோகுல குமரன், தனுஜா, மகிழன், பிரியங்கா, கோகுல்(பிரான்ஸ்), நிவேத்(பிரான்ஸ்), அக்‌ஷயா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அக்‌ஷரன், அபிராம் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-04-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் வேலணை சாட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
41 கலட்டி லேன்,
கோண்டாவில் மேற்கு,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.