மரண அறிவித்தல்

In loving memory of
Kamaleshwary Thanigasalam
Age 75February 15, 1940 – December 11, 2015
- Born in
- Thavadi
- Lived in
- Kokkuvil, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தாவடி மாரிதோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் செம்பியன் லேனை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கமலேஸ்வரி தணிகாசலம் அவர்கள் 11-12-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வல்லிபுரநாதன் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தணிகாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயக்குமார், பிறேம்குமார், தவக்குமார், ஜெயபுஸ்பா, பிரியதர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சண்முகநாதன், காலஞ்சென்றவர்களான மகாலட்சுமி அம்மா, வேலும் மயிலும் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
திலகமலர், அனுஷா, பாமினி, அதீசன், முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராசமலர், விசுவநாதன், புஸ்பமலர், சாந்தமலர், சந்திரநாதன், காலஞ்சென்ற யோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிவேதா, அபிஷா, அர்ச்சயா, டிலிக்ஷனா, ரிஷகேசன், அபினாஷ், அனிஷ், பிரவீன், சச்சின், ஷாலினி, ரித்திகா, அஷ்விகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

