1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kanagaratnam Thanabalasingam
Age 52November 2, 1956 – February 12, 2009
- Born in
- Kili Punakari
- Lived in
- Kili Punakari
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசித்தங்குறிச்சி பூநகரியைச் சேர்ந்த கனகரத்தினம் தனபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நாம்,
சீரும் சிறப்புமாக
சிரித்து வாழ்வதாற்காய்
சிட்டாய் பறந்து
நித்தம் உழைத்தவரே
புத்தரின் புத்திரர்கள்
போதித்த நெறிதனிலே
சுந்தரத் தமிழீழமதைச்
சூறையாட வந்தவரின்
கரங்களிலே சிக்காது தப்பிக்க
உடைமைகளை இழந்து
ஊர் விட்டு வந்த உன்னை
விட்டானா காலன்?
உயிர் ஒன்றே மிச்சமாய்
உலவித் திரிந்தவரே
தேவிபுரம் என்னுமூரில்
எதிரியவன் ஏவிய எறிகணையில்
எம்மை விட்டுப் போவீர் என
எள்ளளவும் நினைக்கலையே!
ஐயோ! தமிழனாய்ப் பிறந்ததற்கு
தந்திட்ட தண்டனையா?
பூவாய் பிஞ்சாய் காயாய் கனியாய்
பறித்தாரே பாவியர்கள்
தேற்றுவாரின்றி நிற்கிறோம் நிற்கதியாய்
தகரமும், தறப்பாளும், தண்ணீரும்
தந்தால் மட்டும் தீருமா எம்சோகம்?
ஆறுமா எம் மனம்?
பிரிவால் வாடும்
மனைவி யோகேஸ்வரி,
பிள்ளைகள் - சறோசனா, யோகபாலன், தர்சிகா, தனுசா, தச்சாயினி, திவ்வியன், கயந்தன்.
மருமகன் - வதனகுமார்
பேரப்பிள்ளை - கயல்விழி
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

