1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kanagesvaran Nimalini
Age 28October 13, 1980 – April 21, 2009
- Born in
- Mannar Puthukudiyiruppu
- Lived in
- Mullai Puthukkudiyiruppu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம் முல்லைத்தீவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகேஸ்வரன் நிமாலினி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், கனகேஸ்வரன் தவமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,
நந்தினி(இலங்கை), மோகனரூபன்(சுவிஸ்), மோகனதீபன்(இலங்கை), சேரலாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுதாஸ்கரன்(இலங்கை) அவர்களின் மைத்துனியும்,
பகீர்த்தனன், கிருஷ்ணி ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
எம் வாழ்வில் தென்றல் என வந்துதித்த எம் செல்வமே
பண்பின் உறைவிடமாய் பாசத்தின் திருவிளக்காய்
அறிவின் சிகரமாய் மிளிர்ந்த என் அன்பு சகோதரியே
வீட்டில் திருவிளக்கேற்றி ஒளி வீசுவாய் என்றிருந்தோமே அம்மா
சித்தி, சித்தி என்று அழைக்க நீ இல்லையம்மா
இடைநடுவில் காலத் தேவனவன் உன்னைப் பறித்தானே
எம்மைப் பிரிந்து எங்கு சென்றாய் எம் செல்வமே
நீ இன்றி நாமிங்கு தவியாய் தவிக்கிறோமே அம்மா.
அன்னாரின், ஆத்மா சாந்தியடைய இறைவவைப் பிரார்த்திக்கின்றோம்.
— உன்பிரிவை தாங்கமுடியாமல் தவிக்கும் அம்மா, அப்பா, சகோதரி, சகோதரர்கள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

