31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Kanakaiah Nallammah
Age 81October 1, 1936 – August 19, 2018
- Born in
- Sinnadampan
- Lived in
- Sinnadampan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா நெடுங்கேணி சின்னடம்பனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகையா நல்லம்மா அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
விழியோரம் கசியும் கண்ணீர்த் துளிகள்
எங்களை மட்டுமல்ல எல்லா உறவுகளையும்
ஒரு நொடி மெளனமாக்கியது.........!
மரணம் என்பது மனிதருக்கு இயல்பு
எப்பொழுது எப்படி வருகின்றது என்பது - வேதனை
அம்மா உடலில் சுமந்து எங்களைப் பெற்று
இரத்தத்தைப் பாலாக்கி பசிதீர்த்து
மோனை மோனை என்று அழைத்து
அன்புடன் கண்டிப்பும் காட்டி வளர்த்த அம்மா!
நோய் நொடியின்றி வாழ்ந்து வந்தீர்கள்
நூறாண்டு வாழ்வீர்கள் என்று எண்ணினோம்,
திடீரென்று காலனவன் கொண்டு சென்றதேனோ?
தங்களின் பிரிவுக்கு நோய்தான் காரணமோ?
இப்பிறவி போதுமென்று சென்றீர்களோ?
அம்மா அம்மா என்று அழைக்கின்றோம்!
அம்மா அம்மா என்று அழுகின்றோம்!
எங்கே சென்றீர்கள்? எங்கே மறைந்தீர்கள்!
எங்களை ஆறாத்துயரில் மூழ்கவிட்டு சென்றதேனோ?
பூமியில் வாழ்ந்திடப் பிடிக்காமல் போனீர்களோ?
பூமியில் வாழ்ந்தது போதுமென்று போனீர்களோ?
எங்கு வாழ்ந்திடப் போனீர்கள்....!..?
அம்மா உங்களின் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
எங்களின் குல விருட்சம் சாய்ந்த போது துயர் துடைக்க நேரில் வந்தோர், தொலைபேசியில் ஆறுதல் கூறியோர், உடனிருந்து உதவிகள் செய்தோர், கண்ணீர் அஞ்சலிப்பிரசுரங்கள், மலர்மாலைகள் கொண்டு துன்பத்தை பகிர்ந்து கொண்டோர் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டி நிகழ்வு 16-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கீரிமலையிலும், வீட்டுக்கிருத்தியை நிகழ்வு 18-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்களும் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன விருந்துபசாரத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

