மரண அறிவித்தல்

In loving memory of
Kanapathipillai Nadarajah
January 13, 2016
- Born in
- Velanai
- Lived in
- Kilinochchi, Velanai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை மேற்கு வங்களாவடி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகபுரம் 6ம் பண்ணையை வசிப்பிடமாகவும், வேலணை 06ம் வட்டாரத்தை தற்போதய வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை நடராஜா அவர்கள் 13-01-2016 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகபூரணம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், தம்பிமுத்து ஆச்சிமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நாகரத்தினம்(கண்மணி) அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவமுகுந்தன், ஹரிஹரன், அமுல்யகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தியாகராஜா, அன்னலிங்கம், அன்னலட்சுமி, திலகவதி, அகிலேஸ்வரி, லலிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
செல்வி, கார்த்திகா(பிரதேச சபை- வேலணை), கோவர்த்தனி(பிரதேச செயலகம்- தீவகம் தெற்கு வேலணை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
புஸ்பலீலாவதி, காலஞ்சென்ற மாலினி, இராஜகோபால், பரராஜசேகரம், கருணாநிதி, தவேந்திரராஜா, காலஞ்சென்ற நாகம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜாதவன், பூர்ணியா, மதுஷினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது தற்போதய முகவரியில் நடைபெற்று பின்னர் வேலணை அம்பலவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
வேலணை மேற்கு,
வங்களாவடி,
06ம் வட்டாரம்,
வேலணை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

