மரண அறிவித்தல்

In loving memory of
Kanapathipillai Sanmuganathan
July 25, 2017
- Born in
- Nallur
- Lived in
- Thirunelveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூர் ராணி வீதியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கு செங்குந்தா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் 25-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையாமுதலி தவமணி தம்பதிகளின் அன்பு மருகனும்,
குலமணி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசன்னா, பிரதாப், காயத்திரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயகநாதன்(டென்மார்க்), பாக்கியநாதன்(பிரான்ஸ்), நிர்மலாதேவி(ஜெர்மனி), பாஸ்கரன்(கனடா), றஞ்சினிதேவி(கனடா), சிறிதரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

