25ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kanapathipillai Saraswathy
Age 49February 21, 1944 – October 13, 1993
- Born in
- Uduvil
- Lived in
- Uduvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுவில் காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சரஸ்வதி அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
அம்மா இருபத்தைந்து ஆண்டுகள்
உங்களின் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே!
எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள்
எல்லாம் பொற் காலங்கள் தான்!
அம்மா உங்களது அன்பான அரவணைப்பு,
இனிமையான பேச்சு, பழக்கவழக்கங்கள்,
நேர்மை, எல்லோருடனும் பழகும் தன்மை
இவைகளால் எல்லோராலும்
போற்றப்பட்டீர்கள் மதிக்கப்பட்டீர்கள்!
அம்மா உங்கள் கடமைகளை மிகவிரைவில்
முடித்துக்கொண்டு எங்களிடமிருந்து
சென்றுவிட்டீர்களே!
மீண்டும் ஒரு பிறப்பிருந்தால்
எங்களுக்கு அம்மாவாக வந்திடுங்கள்
காத்திருப்போம்!
அம்மா இருபத்தைந்து ஆண்டில்
மட்டுமல்ல எங்கள் உயிர் உள்ளவரை
உங்களை நினைத்தும்!
எங்களுக்கு காவல் தெய்வமாக
என்றும் நீங்கள் இருப்பதாக
எண்ணி உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்!
உங்கள் கணவர், சகோதரி,
பிள்ளைகள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,
மைத்துனிமார், பெறாமக்கள்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

