கண்ணீர் அஞ்சலி

In loving memory of
Kanapathipillai Sinnathurai
Age 93October 16, 1922 – July 11, 2016
- Born in
- Velanai
- Lived in
- Pungudutivu 2nd Ward, Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா ஓமந்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சின்னத்துரை அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
காலஞ்சென்ற தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பத்மாவதி முதலித்தம்பி(முன்னாள் பிரபல வர்த்தகர்- கொம்பனித்தெரு கொழும்பு), பரநிருபசிங்கம் முன்னாள் பொது முகாமையாளார்- வவுனியா தெற்கு ப.நோ.கூ.சங்கம்), காரளபிள்ளை(முன்னாள் ஓய்வுபெற்ற அஞ்சல் அலுவலகர்- புங்குடுதீவு), அரியரத்தினம்(TTC- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சண்முகநாதன்(அகில இலங்கை சமாதான நீதவான், நூலகப் பொறுப்பதிகாரி- வவுனியா) அவர்களின் அன்புச் சிறிய தந்தையும் ஆவார்.
அன்பிற்கு அகல்விளக்காய்
வாழ்க்கைக்கு வழிகாட்டியாய்
பகல் இரவாய் ஒளி தந்து
பாரினிலே எங்களை விட்டு
சென்றீர்களே குஞ்சி ஐயா!
மைத்துனரின் பிரிவுச்செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம்
எம்மால் ஜீரணிக்கமுடியாத பேரிழப்பு
கண்ணை இமை காப்பது போல்
தன் குடும்பத்தையும் உறவுகள் அனைத்தையும்
நண்பர்கள் அனைவரையும்
தன் இனிய அன்பினால் கவர்ந்து நின்றாய்
எனது மைத்துனரின் இறுதிக்கிரியையில்
உறவுகள் பல கலந்து கொண்டிருக்கும் வேளையில்
எம்மால் கலந்துகொள்ள முடியாமல் போனது
ஆறாத துன்ப வேதனையாகும்!
அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலியை செலுத்துவதுடன்
ஆத்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
— ஆறுமுகம் அரியரட்ணம்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

