1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kandaiah Nithyananthan
Age 68April 6, 1940 – January 6, 2009
- Born in
- Kalviyangadu
- Lived in
- Kalviyangadu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநிலையற்ற வாழ்வில் நிறைவாய் வாழ்ந்து
மரணத்தையும் வென்று வந்து எம்மை மகிழ்வித்து
எம்மோடு கூடிக் குழாவி நாம் எதிர்பாராத தருணத்தில்
எம் மனங்கள் எல்லாம் திகைத்திட
வைகுண்ட ஏகாதசி தனில் ஆண்டவன் அடி ஏகி
ஆண்டொன்று இன்று ஆனது அப்பா.
எத்தனை இடர்கள் வந்தாலும்- அப்பா
நீங்கள் எம்மோடு இருக்கின்றீர்கள் என்றெண்ணி வாழ்ந்தோம்
ஆறாத்துயராய் ஆனதே உங்கள் பிரிவு எம்முள்ளே.
அன்போடு பண்பையும் பாசத்தையும் எம்முள் விதைத்து
இன்புடன் வாழ வழி சமைத்து இறைவனடி சென்றீர்களே
இன்னும் வாழ்ந்திருக்கலாம் அப்பா நீங்கள் எங்களோடு.
எம்முயிர் தந்தையே எங்கள் உள்ளங்களின் ஒளிவிளக்கே
சூரியனைக்கண்டு மலரும் செந்த்தாமரையாய்
உங்கள் அன்புமுகம் பாராமோ அப்பா.
இறையருளோடும் உங்கள் ஆசிகளோடும்
எங்கள் வாழ்வின் கனவுகளும் வளர்ச்சிகளும் நிஜமாகும்..
எம்மோடு நீங்கள் என்றென்றும் கூட இருக்கின்றீர்கள் என்று
இவ்வுலகில் உளம் தளராது பயணிக்கின்றோம்.
உங்கள் ஆத்மாசாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி!!!! ஓம் சாந்தி!!!! ஓம் சாந்தி!!!!
— மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

