மரண அறிவித்தல்

In loving memory of
Kanthasamy Krishnakumar
Age 46September 18, 1969 – March 31, 2016
- Born in
- Pungudutivu 3rd Ward
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி கிருஸ்ணகுமார் அவர்கள் 31-03-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி(கிளாக்கர்), ஜெகதாம்பாள்(இலங்கை) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நல்லதம்பி, தங்கம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவானி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
நவீன் அவர்களின் அன்புத் தந்தையும்,
கிருஸ்ணமூர்த்தி(பாபு- பிரான்ஸ்), கிருஸ்ணராஜா(ராதா- பிரான்ஸ்), கிருஸ்ணரூபன்(ரூபன்- இலங்கை), சுவிதா(சுவி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஜனி(பிரான்ஸ்), வனிதா(பிரான்ஸ்), குமுதா(இலங்கை), காலஞ்சென்ற ஜெயக்குமார், காங்கேசு(பிரான்ஸ்), சிவனேசன்(கனடா), கலா(பிரான்ஸ்), பவளம்(இலங்கை), நந்தன்(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,
மகேஸ்வரி(பிரான்ஸ்), சுசீலா(கனடா), சிறிமுருகன்(பிரான்ஸ்), சந்திரன்(இலங்கை), கிருஷாலினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
இராமசந்திரன், பர்வதகௌரி(இலங்கை), திருஞானம், செல்வராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற சிவனேசன், சத்தியலச்சுமி, சிவராசன், விஜயலக்ஷ்மி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
7 Square des Tilleuls,
93130 Noisy-le-Sec,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

