Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Karthi Kathiravelu

In loving memory of

Karthi Kathiravelu

Age 90April 12, 1926 – January 31, 2017

Born in
Ilavalai
Lived in
Vavu Pandarikulam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்த்தி கதிரவேலு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

செல்வம் நிறைந்து விளங்கும் சித்திரமேழி மண்ணில் கார்த்தி சீதேவி தம்பதியரின் தவப்புதல்வனாய் வந்துதித்த செல்வத்திருமகனே
பண்புடன் ஒழுக்கசீலராய் வாழ்ந்து இல்லறத்தை நல்லதாக நடத்தி பண்பான மக்களை பெற்ற எம் தந்தையே!

அன்பின் பொக்கிஷமாய், பாசத்தின் சொரூபமாய்
எமை வளர்த்தெடுத்த எம் பிதாவே!
எங்கள் எல்லோரையும் தவிக்க விட்டு
அம்மா சென்ற இடம் சென்றீரோ?

எமக்கு தாய் இல்லா நிலையிலும்
தாய்க்குத் தாயாகவும், தந்தையாகவும் திகழ்ந்தாய்
ஐயா ஐயா என்று அழைக்காத நாள் இல்லை
பிள்ளைகள், உறவினர்கள் எல்லோரும்
ஐயா என்றுதான் அழைப்போம்
இனி யாரை அழைப்போம்

உங்கள் மருமக்கள் எல்லோரிடமும் மிகவும் பாசமாக இருந்தீர்கள்
மாமா என்று அழைத்தால் தேனாய் உருகிடுவீர்
அப்பப்பா, அம்மப்பா என்று ஆசையாகக் கூப்பிட்ட பேரப்பிள்ளைகள்
தாத்தா என்று அழைக்கும் பூட்டப்பிள்ளைகளும் தவிக்கிறார்கள்
உற்றார், உறவினர்கள் எல்லோரையும் விட்டு எங்கு சென்றீர்கள்

உத்தமன் எம்பிதா எமைப்படைத்து
அன்பு சொரிந்து வளர்த்தெடுத்து
எம் வாழ்க்கையை முன்னேற்றி
மக்கள் சேவையை மகேசன் சேவையாக
சித்தமதில் திடங்கொண்டு சீராக வாழ்ந்து வீடுபேறு கண்ட எம்தந்தையின்
31 நாட்கள் கடந்தாலும் உன் நினைவுகள் நீங்கவில்லை
சொந்தமென பலர் இருந்தாலும் சொல்லி ஆற ஓர் தந்தை அது நீயே!

எம் தந்தையின் ஆத்ம சாந்திக்காக இளவாலை வைரவரை பிரார்த்திக்கின்றோம்.
இங்கனம் உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்
ஓம் சாந்தி சாந்தி!

அன்னாரின் இறுதிக்கிரியையில் பங்கு பற்றியோருக்கும், தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டவர்களுக்கும் எமது நன்றிகள்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 28-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று கீரிமலையிலும், 02-03-2017 வியாழக்கிழமை அன்று வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்திலும், 03-03-2017 வெள்ளிக்கிழமை அன்று கீரிமலை சிவபூமி மண்டபத்திலும் நடைபெறும்.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · February 2, 2017மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.