Aruthal

2ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Karunaanithy Perampalam

In loving memory of

Karunaanithy Perampalam

Age 40April 25, 1968 – September 6, 2008

Born in
Analaitivu 3rd Ward
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

அனலைதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கனடா மிசிசாகாவை வதிவிடமாகவும் கொண்ட கருணாநிதி பேரம்பலம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அகலுமா உன் நினைவு
ஆண்டிரண்டு போயிடினும்
இதயம், விம்மி வெடிக்குதையா - எம்
ஈரவிழிகளும் காயவில்லை
உத்தமனே! உன் நினைவு
ஊறிப் போனது உள்ளங்களில்
எம் வைரமதைத் தொலைத்துவிட்டு
ஏங்கி ஏங்கி தவிக்கின்றோம்...

ஐயா உன் நினைவலையால்
ஒரு பொழுதும் உனை மறவாது
ஓசையின்றி அழுகின்றோம்
ஒளடதம் இதற்கு ஏது ஐயா!
ஆண்டவன் தான் துணை நமக்கு
ஈரவிழிகளுடன் ஈராண்டு கடந்ததுவே!
விழிநீர் துடைத்திட நீ விண்ணைத்தாண்டி வருவாயா
காலங்கள் மாறினும், மாறாது உன் நினைப்பு
கோயிலாம் எம் மனிதன், தெய்வம் நீயன்றோ!

செல்ல மகள் நடைபயின்று
சொல்லும் கதைகள் கேளாமல் - உங்கள்
சிரித்த முகம் அசைவற்று
சித்திரமாய் ஆனதென்ன(சாமி என்றானதென்ன)
இருளாக நாட்கள் தொலைந்து
இருவருடம் ஆனதுவோ

ஏதிதியில் எல்லாமே பொய்யாகி போகையிலே
என்துயரம் மட்டும் மெய்யான மாயமென்ன
உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனை இறைஞ்சும்
உங்கள் அன்பு மனைவி செல்வி
செல்லமகள் மாலதி
அனலை ஐயன் அம்மன் அடியில் தங்கள் ஆத்மா
சாந்தி பெற பிரார்த்திக்கும் தங்கள் அன்புக் குடும்பத்தினர்

— தங்கள் அன்புக் குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.