31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Kasiththambi Poobalapillai
Age 85March 20, 1932 – May 4, 2017
- Born in
- Meesalai South
- Lived in
- Suthumalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சுதுமலை தெற்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த காசித்தம்பி பூபாலபிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னார், காலஞ்சென்ற காசித்தம்பி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிமுத்து, இரத்தினபூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயக்குமார்(கனடா), துஷ்யந்தி(கனடா), சுவர்ணலதா(ஆசிரியை- இணுவில் மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, கந்தசாமி, மற்றும் வடிவேலு(கனடா), இராசமணி, தங்கமணி, நவமணி, தவமணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருபாகரன்(கனடா), லிங்கேஸ்வரன்(ஆசிரியர்- சென் ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வைஷ்ணவி, அவினேஷ், ஐஷ்வர்யா, வாகினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இழப்புச் செய்தியை கேட்டு எம்முடன் சேர்ந்து துன்ப துயரங்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்துகொண்டவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களுக்கும், உலக நாடுகளில் இருந்து தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக அனுதாபங்களை தெரிவித்தவர்களுக்கும், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 03-06-2017 சனிக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் குடும்ப சகிதம் அழைத்து நிற்கின்றோம்.
வீட்டு முகவரி:
குணவாசா,
சுதுமலை தெற்கு,
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.
— ஜெயக்குமார்(மகன்- கனடா)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

