நினைவஞ்சலி

In loving memory of
Ketheskumar Thuraiayah
Workplace Safety and Insurance Board
Age 46February 16, 1966 – July 19, 2012
- Born in
- Mandaitivu
- Lived in
- Mandaitivu, Nallur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர் நல்லலட்சுமி வீதியை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கேதீஸ்குமார் துரைஐயா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்தாண்டுகள் கடந்தாலும் உனது நினைவு நாடி
ஈர விழிகளுடன் உன் வதனம் தேடி
தீராத வேதனையை மனதில் பூட்டி
மாறாத நினைவுகளில் நாமும் வாழ்கின்றோம்
எனது மடி மீது நீ தவழ்ந்த அந்த நாட்கள்....
என்னுள் உயிரோட்டமாய் என்றும் இருக்கும்
உனக்கோர் பிறப்பிருக்குமாயின் எம்மிடமே வந்துவிடு...
மகனே என்று உனை அழைக்க
அவனியில் நீ இல்லை- எனினும்
அலைமோதும் நினைவுதனில்
அழியாமல் நீ இருப்பாய்...
உடன்பிறப்பே எங்கள்உயிர்ச் சகோதரனே!
எம்முடன் பிறந்தவனே
எமது அருமைச் சகோதரனே!
உன்னைத் தேடி எங்கள்கண்கள் களைத்ததையா...
அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...!
உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எமது உடன்பிறப்பே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்...
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

